Mr. மனைவி சீரியலில்…இருந்து விலகும் ஷபானா… புது ப்ராஜெக்ட்ல மீண்டும் சந்திக்கிறேன்
ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா இவரது அமைதியான முகமும் ஆரவாரம் இல்லாத நடிப்பாலும் ரசிகர்களையும் கவர்ந்தவர்.
மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஷபானா பெற்றோரை எதிர்த்து ரகசியமாக ஆரியனை திருமணம் செய்து கொண்டார். ஆரியன் தற்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ஷபானா தற்பொழுது சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் Mr. மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் இருந்து ஷபானா விளங்குவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு காரணம் ஷபானா கர்ப்பமாக இருப்பதாக சீரியல் வட்டாரம் கிசுகிசுக… ஷபானாவோ நான் அதிகமாக யோசனை செய்த பிறகு தான் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுகிறேன்..
விலகுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் இது தான் சரியான முடிவு என்று நினைக்கிறன் …மீண்டும் புது ப்ராஜக்டில் நல்ல கதாபாத்திரம் கொண்ட கதையம்சதுடன் ரசிகர்களை சந்திக்கிறேன் என்று இன்ஸ்டா போஸ்ட் போட்டிருக்கிறார் ஷபானா..