in ,

தடுமாற்றத்தில் மும்பை அணி


Watch – YouTube Click

தடுமாற்றத்தில் மும்பை அணி

மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களும், மனிஷ் பாண்டே 42 ரன்களும் எடுத்தனர். மும்பையில் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டையும் பறித்தனர். 170 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே இஷான் கிஷன் 13 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து நமன் திர் களமிறங்க அவர் 5-வது ஓவரின் முதல் பந்தில் வருண் சக்கரத்தி வீசிய பந்தில் போல் ஆனார். அதே நேரத்தில் பவர் பிளே கடைசி ஓவரின் 5-வது பந்தில் தொடக்க வீரரான ரோகித் சர்மா மணீஷ் பாண்டேவிடம் கேட்சை கொடுத்து11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனால் மும்பை அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டைகள் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் திலக் வர்மா 9-வது ஓவரில் வெறும் 4 ரன்கள் எடுத்து சுனில் நரைனிடம் கேச்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த நேஹால் வதேரா 6, கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர். அடுத்து டிம் டேவிட் களமிறங்க இருப்பினும் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி 30 பந்தில் அரைசதம் அடித்த நிலையில் 16-வது ஓவரில் ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிக்க முயன்றபோது பிலிப் சால்ட்டிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதேபோல டிம் டேவிட் நிதானமாக விளையாடி 24 ரன் எடுத்து 19-வது ஓவரில் வெளியேற அடுத்து வந்த பியூஷ் சாவ்லா கோல்டன் டக் அவுட் ஆகினார். இறுதியாக மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். கொல்கத்தா அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 7 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

அதே நேரத்தில் மும்பை அணி 11 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை திடீர் உயிரிழப்பு

T20 வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை