கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் இசை தின விழா சிறப்பு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் உலக இசை தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கலை பண்பாட்டு துறை காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் உலக இசை தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தலைமை ஏற்று விழாவினை துவக்கி வைத்தார் இதில் தலைமை ஆசிரியை ரமணி வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து மங்கல இசை மற்றும் மாம்பழம் நடராஜன் அவர்களின் சிறப்பு உபன்யாச உரை நடைபெற்றது தொடர்ந்து குமார வயலூர் முனைவர் திருஞான. பாலச்சந்திரன் ஓதுவார் குழுவினரின் தேவார பன்னீசை நடைபெற்றது பட்டதாரி ஆசிரியர் ராமலிங்கம் ஆடலரசு ஓதுவார் கதிர்வேல் சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவினை பரதநாட்டிய ஆசிரியை உஷா சிறப்பாக தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியினை நாதஸ்வராசிரியர் ரவிசங்கர் மிருதங்க ஆசிரியர் வராஜன் வயலின் ஆசிரியர் சுப்ர மோனி.
தேவார ஆசிரியயுர் ராஜுபதி குரல் இசை ஆசிரியர் சண்முகானந்தன் இளநிலை உதவியாளர் கண்ணன் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தவில் ஆசிரியர் ரகுராமன் நன்றிகளை தெரிவித்தார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஆன்மீக ஆன்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.