இசைஞானி இளையராஜா போல் உயர்ந்தவரிடம் கணக்கு வழக்கு கேட்க கூடாது
இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ள 4500 திரைப்பட பாடல்களை
எக்கோ மற்றும் அகி இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பின்பும் தனது பாடல்களை பயன்படுத்தியதன் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர் மகாதேவன் குழு நேற்று விசாரணையை மேற்கொண்டது. அப்போது எக்கோ நிறுவன சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கூறியதாவது.
இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக திரைப்பட உரிமையை தவிர்த்து மற்ற உரிமையை இழந்து விடுகின்றனர். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை வழக்கின் இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்.
இளையராஜா ஒரு இசைஞானி என்பது எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது அவர் பாடலுக்கு அனைத்து தரப்பு மக்களிடையே ஈர்ப்பு இருக்கிறது. Spotify மூலமாக இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்துக்கான கணக்குகளை ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒத்தரவுயிட பட்டுள்ளது.
இளையராஜா தரப்பில் ஆஜரான வக்கீல் கணக்கை தாக்கல் செய்ய ஒரு இசையமைப்பாளருக்கு உத்தரவிட முடியாது என்று மறுக்க அதற்கு மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் இளையராஜா எல்லோரையும் விட மேலானவர் என நினைக்கிறார் கூற அதற்கு மூத்த வக்கீல் ஆமாம் இளையராஜா எல்லோரையும் விட மேலானவர் தான் இதை வீம்புக்காக சொல்வதாக நினைக்க வேண்டாம் என்று வாதிட்டார். இதை அடுத்து நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.