தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகளின் பயன்பாட்டுக்கு முசிறி எம்எல்ஏ தியாகராஜன் திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 27- லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆறு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு தொட்டியம் நகர செயலாளர் எம்.ஏ.ஆர் விஜய் ஆனந்த் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா தொட்டியம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தொட்டியம் ஒன்றியம் உடையாளகுளம்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு முசிறி எம்எல்ஏ திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் திரளாக கலந்து கொண்டனர்.