in

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் குளித்த போது மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் குளித்த போது மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முசிறி சாலியர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் கூலித் தொழிலாளி.இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் காவிரி ஆற்றில் குளித்துள்ளார்.

அப்போது மழை பெய்துள்ளது.மேலும் திடீரென மின்னல் தாக்கியதில் முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே சுருண்டுவிழுந்தார்.அப்பகுதியில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுமக்கள் முத்துலட்சுமியை ஆம்புலன்ஸில் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.முத்துலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதை அடுத்து சடலம் முசிறி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது.சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What do you think?

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று காவிரியில் நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரி

திருமணத்துக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் கண்மணி மனோகரன்