in

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் முத்தாலம்மன் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் முத்தாலம்மன் தேரோட்டம்

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் முத்தாலம்மன் தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.

இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வத்திராயிருப்பு பகுதி நீர் வளம், நிலவளம் மிகுந்து செழிப்புடன் இருக்க காரணம் வத்திராயிருப்பில் எழுந்தருளியுள்ள மழைக்கு அதிபதியான முத்தாலம்மன் தான் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒரு வார காலம் விழா எடுத்து இப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த அக் 8ஆம் தேதி அன்று கலை விழா உடன் தொடங்கியது.

ஆறு நாட்கள் நடந்த கலை விழாவின் முடிவில் அதிகாலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது.

தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் எழுந்தருளச் செய்தனர்.

மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் கரகம் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வத்திராயிருப்பு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முத்தாலம்மன் பக்த சபை நிர்வாகிகள், பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

What do you think?

மகளிர் உரிமைத் துறை சார்பாக பெண்களுக்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன்னம்பிக்கை பேச்சு

தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி