நாமக்கல் மேலபேட்டபாளையத்தில் முத்தாலம்மன் திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்திகடன்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேலபேட்டபாளையத்தில் அருள்தரும் அம்பிகையாக திகழும் அருள்மிகு முத்தாலம்மன், சந்தியப்பன், காளியம்மன் ஆலய ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு 1-9- 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு வடிச்சோரு, கரகம் பாளித்தலுடன் நிகழ்சி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நேற்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் பூசாரி பூ கரகம் தலையில் சுமந்தும் அவருடன் வேல் பூசாரி அருவாள் பூசாரியுடன் உற்சவ முத்தலாம்மன் பல்லாக்கில் பக்தர்கள் தோள்களில் காவிரியாற்றில் இருந்து பல்வேறு வீதிகள் வழியாக சுமந்து திருக்கோயிலை வந்தடைந்ததும் ஆண் பக்தர்கள் மட்டும் பூக்குழி இறங்கினர்.
பெண்கள் பூவாரி போடும் நிகழ்வில் கலந்து கொண்டு நேர்தி கடன் செய்தனர். பின் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திக் அருள் பாலித்த முத்தாலம்மன் முன் பூங்கரகம் வைக்கப்பட்டு பின்னர் மூலவர் முத்தாலம்மனுக்கு பஞ்ச தீபம், கற்புற மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்விழாவிற்கு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செயதிருந்தனர்.