in

நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடும் மர்ம நபர்

நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடும் மர்ம நபர்

 

நாகையில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பில் ஏராளமான பணியாளர்கள் தங்கி உள்ளனர்.

அந்த வணிக வளாகத்தில் பேக்கரி, செல்போன் கடை , டீக்கடை உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த மோட்டார் சைக்கிளில் இருந்து மர்ம நபர்கள் பெட்ரோலை திருடி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போல மோட்டார் சைக்கிள் அதிகம் நிறுத்த பட்ட இடங்களில் சிலர் பெட்ரோலை மட்டும் திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

What do you think?

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தர்காவில் கந்தூரி விழா

பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் முதலில் அதிமுகவை திமுகவை அழிக்க வேண்டும் – தமீமுன் அன்சாரி