in

கும்பகோணம் அருகே காளியம்மன் கோவில் கதவை உடைத்து காளியம்மன் கழுத்தில் கிடந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்கள்

கும்பகோணம் அருகே காளியம்மன் கோவில் கதவை உடைத்து
காளியம்மன் கழுத்தில் கிடந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் வடபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவுமர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொது மக்கள் சோழபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து ஆதி வடபத்திர காளி, ஸ்ரீவடபத்திர காளி, ஆடு காளியம்மன், பட்டறை காளி ஆகிய நான்கு காளியம்மன் சிலையில் இருந்த சுமார் இரண்டு பவுன் ஆறு கிராம் தாலி சங்கிலி மற்றும் இரண்டு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சோழபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தியுள்ளனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே கணவன் மனைவி இருவர் தூக்கிட்டு தற்கொலை