மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்ய உள்ளார் முன்னதாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
முதல் முதலாக இந்தியை திணித்தது யாரு.?
யார் இந்தியை கொண்டு வந்தார்களோ அவர்களையும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தவர்கள்
தேர்தல் நேரத்தில் நாடகம் போடுகிறது.
திராவிட கட்சியின் ஆட்சியில் இந்தி இல்லையா.?
எல்ல இடங்களிலும் இந்தியை கொண்டு வந்திட்டீங்க.!
நான் என் இந்தியை மட்டும் படிக்க வேண்டும்.?
போஜ்புரி, பீகாரி படிக்கலாமே ஏன் இந்தியை மட்டும் படிக்க சொல்வதன் நோக்கம் என்ன.? மும்மொழிகொள்கையில் தமிழ் மொழி ஏன் முக்கியத்துவம் இல்லை.!
ஹிந்தி மொழியை இந்தியாவின் மொழி என யார் கூறியது.?
இந்தி தொன்மை மொழி என பேசுவது.? மொழியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். டீம் பார்ட்னர் என்று அம்மா சொல்கிறார்.!
அந்த நேரத்தில் அவர்கள் பேசுவார்கள்.!
பெரியார் கோட்பாடுகளை எதிர்த்து பேசியதும் நாங்களும் எதிர்க்கும் அனைவரும் எதிர்கிறோம் என்று கூறினார் அதற்காக நாங்கள் பார்ட்னர் ஆயிருவோமா.?
ஒரு நடிகருடைய ரசிகராக இருப்பவர் என்னை தேட மாட்டார்
பொழுதுபோக்கு தளத்தில் தலைவரை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள் போராட்டக் களத்தில் தலைவரை தேடுபவர்கள் யாரோ அவர்தான் என்னை தேர்ந்தெடுப்பார் நாங்கள் எந்த மாதிரியான சூழலில் இந்த கட்சியை உருவாக்கினோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நாங்கள்.!
நாங்கள் இழந்தது பெரிது கச்சத்தீவு, காவேரி எல்லாம் இழந்த பிறகு இந்த அரசு நமக்கான அரசு இல்ல என்பதை அறிந்து நமக்கான உரிமையை மீட்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்த ஒரு படை. மற்ற இயக்கங்களுடன் எங்களை ஒப்பிட்ட வேண்டாம்.
எனக்கு இருக்கும் ஓட்டு வங்கியை வைத்து நான் பணம் பார்க்கலாமே