in

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா

சென்னை தியாகராய நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிட பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்டில் 26 கோடியில் பிரம்மாண்டமாக 2017 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது கட்டிடம் கட்ட மேலும் 30 கோடி அளவில் நிதி தேவைப்பட்டதால் முன்னணி நடிகர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

மேலும் நிதி தேவைப்படுவதால் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. நடிகர் சங்க கட்டிடத்தில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து உள்ளதால் ஜூன் மாதத்தில் திறப்பு விழா நடைபெறும் என்று கூறினர்.

நடிகர் சங்கத் தலைவர் ஆன விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

தற்பொழுது அவருக்கு 47 வயதாகும் நிலையில் ஜூன் மாதம் கட்டிடம் திறக்கும் நிலையில் இந்த ஆண்டு விஷால் திருமணம் செய்து கொள்வாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

What do you think?

விழிப்புடன் இருங்கள் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

கஜினி-2 விரைவில் தொடக்கம்