in

வாய்பேச்சில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் முடிந்த நாகை வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்


Watch – YouTube Click

வாய்பேச்சில் ஆரம்பித்து வாக்குவாதத்தில் முடிந்த நாகை வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாகையில் வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பேசிவிட்டு வெளியேறியதால் கொந்தளித்த நாம் தமிழர் கட்சியினர் ; தங்களது பேச்சை கேட்காமல் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நிகழ்வை புறக்கணித்தால் கலந்தாய்வு கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்: நாகை துறைமுகத்திற்கு அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட 380 கோடி எங்கே என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முன்னாள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பி பேட்டி

பேட்டி ;
1. கார்த்திகா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
2. சுபாஷ் சந்திரன், தலைவர் இந்திய வர்த்தக தொழிற் குழுமம்

நாகை கோட்டைவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் சார்பாக வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகை தொகுதி மேம்பட வேட்பாளர்களின் வாக்குறுதிகள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்கேட்பு உள்ளிட்டவைகளை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, பாஜக வேட்பாளர் ரமேஷ், சுயேட்சை வேட்பாளர்கள் வியஜராகவன், பிரேம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் நாகையில் விமான நிலையம் அமைப்பேன், நாகையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவேன் என கவர்ச்சிகர வாக்குறுதிகளை அள்ளி இரைத்து உரையாற்றினார். அதிமுக வேட்பாளர் பேச்சை நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக வேட்பாளர்கள் மட்டுமின்றி அவர்களுடன் வந்த விசுவாசிகளும் ஒருமணிநேரம் பொறுமையாக அமர்ந்து பேசினர்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுபாஷ்சந்திரன் அடுத்ததாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை பேசுவதற்கு அழைத்தார். அப்போது மேடையில் இருந்த அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் அனைவருக்கும் கை கொடுத்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். தொடர்ந்து அவருடன் முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் வந்த அதிமுகவினரும் வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தும் வராமல் மேடையில் இருந்தபடி கண்டனம் தெரிவித்த பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அவர்களின் கருத்துகளை பதிவு செய்யாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். வேட்பாளர்கள் வெளியேறிய காரணத்தால் நிகழ்வில் பங்கேற்க வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இந்த நிகழ்ச்சி ஒருதலைபட்சமாக நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் தலைவர் அதிமுக நாகை மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்றும் நாம் தமிழர் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 2011 முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ ஜெயலலிதா நாகை துறைமுகத்தை மீட்டெடுப்பதாக 380 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது அந்தத் தொகை எங்கு ஒதுங்கியது என்பதை முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளரும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதியை வென்றெடுத்தால் சிபிசிஎல், ஓ என் ஜி சி நிறுவனத்தை விரட்டியடிக்கும் எனவும் பத்தாண்டுக்குள் உப்பு நீர் குடிநீராக மாறிவிடும் எனவும் நாம் தமிழர் கட்சியினருக்கு இன மானமும் தன்மானமும் முக்கியம் என்பதால் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெள்ளி நடப்பு செய்ததாக தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க கூட்டத்தில் இருந்து அனைவரும் வெளியேறினால் காலியாக காணப்பட்ட நாற்காலிகள் முன்னிலையில் சீரியசாக உரையாற்றிய சுயேட்சை வேட்பாளர் பிரேம் தனது பங்கிற்கு வாக்குறுதிகளை அள்ளி இறைத்தார். ஒருகட்டத்தில் யாரும் தனது பேச்சை கண்டுகொள்ளாத நிலையில் நிகழ்ச்சியில் இருந்து அவரே வெளியேறினார்.

நிகழ்ச்சியின் விதிமுறைகள் அனைத்து வேட்பாளர்களுக்கும் முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், யாருக்கும் சார்பு இல்லாமல் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

7000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் உலக சாதனை

அ தி மு க , மீது வீண் வழி சுமத்தி பின்னுக்கு தள்ளி விடலாம் என்று நினைக்காதீர்கள்