நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை: ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறையினர் அறிவுறுத்தல்.
வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 வரை வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் பட்டினச்சேரி துவங்கி கோடியக்கரை வரை உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 670க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500க்கும் நாட்டு படகுகள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் அந்தந்த படகு நிறுத்தும் தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடலுக்குச் சென்ற சுமார் 30 விசைப்படகுகள் உடனடியாக கரைத்திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் மற்றும் டீசல் ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.