தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட திட்டத்தால் நாகை விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவேரி நதிநீரை மட்டும் நம்பி ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆணடு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடைமடை மாவட்டமான நாகையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ள ஆயத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டம் பெரும்பாலான விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை குறுவை சாகுபடி மேற்கொள்ள அரசு தொகுப்பு திட்டம் அறிவித்து ஊக்குவிப்பது மேலும் வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை சம்பா சாகுபடி தொகுப்பு திட்டமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.