திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் நாகை எம்பி வேட்பாளர் செல்வராஜ் மறைந்த தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் அப்போது நரிகுறவமக்கள் இருவர் பாசி மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வை செல்வராஜ் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே பி எஸ் ஆர் நினைவு மண்டபத்தில் பி. சீனிவாசராவ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மேளதாளம் முழங்க நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர் அப்போது ஓடி வந்த நரிக்குறவ மக்கள் பாசி மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை திருவள்ளுவர் சிலை இமானுவேல் சேகரனார் சிலை அண்ணா சிலை அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
ஊர்வலத்தின் போது மேளதாளன இசைக்கு ஏற்ப நபர் ஒருவர் நடனமாடி வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.