in

நாகப்பட்டினம் கோகூர் புனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார பெரிய தேர்பவனி


Watch – YouTube Click

நாகப்பட்டினம் கோகூர் புனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார பெரிய தேர்பவனி

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்த ஆண்டுக்கான ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், மாதா, சம்மனுசு ஆகியோர் எழுந்தருளினர்.

முன்னதாக, ஆலய பங்குத்தந்தை தேவ சகாயம் தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார்.

ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் பேண்ட் வாத்தியம் முழங்க முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் பங்கேற்று கருப்பு ஆடை அணிந்து கொண்டு சாம்பிராணி சட்டியை கையில் ஏந்தியபடியும், ஆடு மாடு, கோழி உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

இந்த தேர் பவனியில் சுற்று வட்டாரமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிப்பட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது