in

பழனியில் நக்கீரர் தமிழ்சங்கம் சார்பில் நக்கீரர் தமிழ் மாநாடு நடைபெற்றது

பழனியில் நக்கீரர் தமிழ்சங்கம் சார்பில் நக்கீரர் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சங்ககால புலவர்கள் புகழ் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு படை வீட்டில் இந்த மாநாடு நடத்தபடுகிறது.இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூன்றாம் படைவீட்டில் நக்கீரர் தமிழ்ச்சங்கம் சார்பில் இதன் தலைவர் இரா.பாஸ்கரன் தலைமையில் நக்கீர்ர் தமிழ் மாநாடு நிகழ்சிகள் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நக்கீரர் தமிழ் மாநாடு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புலிப்பாணி சித்தரின் கருவிழி வாரிசு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் மாணவிகள் பரத கலைகளை ஆடி பொதுமக்களை கவர்ந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி அருகே கணவன் மனைவி இருவர் தூக்கிட்டு தற்கொலை