பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகனத்தில் வீதியுலா….
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓலை சப்பரத்தை இழுத்தனர் ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே முதன்முதலாக மகம் பிறந்த, திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு கிரிசுந்தரி அம்பாள் உடனாய அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு ரிஷப வெள்ளி வாகனத்தில் எழுந்தருள, திருசிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, மஞ்சள் ,சந்தனம் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்தில் சுவாமிகளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரமாண்டமான ஓலை சப்பரத்தில் கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு வீதியுலா காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சப்பரத்தை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து சென்றனர்.