நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மேனகா, கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தீனார்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா தெரிவித்துள்ளார்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இதற்காக தமிழ்நாடு மட்டும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண்களும் 20 தொகுதிகள் ஆண்களும் என சம வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்தல் சந்திக்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற வேட்பாளராக டாக்டர் மேனகா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மேனகா…
நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் என்றும் நெடுங்கால கோரிக்கையாக உள்ள மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக புதுச்சேரி உருவாக்கப்படும் என்று கூறிய அவர் சமயம் சாராமல் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்கு உழைப்போம் அடிதட்டு மக்களுக்கும் உயர்தரமான இலவச மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறிய வேட்பாளர் மேனகா
ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
பேட்டியின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.