in ,

நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையம் அருங்கரை சந்தனம் நாச்சிமார் ஆலய பாலாலய விழா

நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையம் அருங்கரை சந்தனம் நாச்சிமார் ஆலய பாலாலய விழா

நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஒன்றியம் பேட்டப்பாளையம் காவிரி கரைமீது அமைந்துள்ள இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட ஸ்ரீ அருங்கரை சந்தனம் நாச்சிமார் சுவாமிகளின் பாலாலய விழாமிக விமர்சையாக நடைபெற்றது, முன்னதாக நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை கணபதி வழிபாட்டுடன் துவங்கி முதற்கால யாகசாலை பூஜை நிறைவுற்றது.

இன்று இரண்டாம் நாள் சிறப்பு வழிபாடுடன் துவங்கியது. 2ம் கால யாகசாலை பூஜையை சிவாச்சாரியார்கள் மிக விமர்சையாக செய்தனர் அப்போது பூர்ணாகதி நிறைவுற்று பின்னர்கலச புறப்பாடு திருக்கோவில் சுற்றி வந்ததும் அத்தி மரத்தில் வரையப்பட்டஅருங்கரை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித கலசதீர்த்தம் ஊற்றப்பட்டு பின்னர் பூக்களால் அலங்காரம் செய்த பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டு பாலாலய விழா மிக விமர்சையாக நடைபெற்றது..

இந்நிகழ்வில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் கோவில் நிர்வாகத்தினர், குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

What do you think?

நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் நூற்றாண்டு பழமைவந்த ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – யாக சாலைக்கு முளைப்பாரி போடும் நிகழ்வு