நாமக்கல் மணப்பள்ளி ஸ்ரீ தங்கமுனியப்பசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தங்க முனியப்பசுவாமி ஆலயமகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை மிக விமர்சையாக நடைபெற்றது..
முன்னதாகநான்கு கால யாகசாலை பூஜைகள் பூர்ணாகதியுடன் நிறைவுற்று சிவாச்சாரியார்கள் புனித கலசத்தை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை சுற்றி வந்து முதலில் ஸ்ரீ ராஜகணபதி கொங்கலம்மன் புக்கராண்டி, நவகிரக கும்பாபிஷேகமும் பின்னர் கோவில் நுழைவு வாயில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தங்க முனியப்பன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
அப்போது சிவாச்சாரியார்கள் சிறப்பு வேதமந்திரங்கள் முழங்க தங்க முனியப்ப சாமி ஆலய விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக பெருவிழாவை மிக விமர்சையாக நடத்தினர் பின்னர் மூலவர் ஸ்ரீ தங்க முனியப்ப சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்