நாமக்கல் – மோகனூரில் – யானை வாகனத்தில் ஐப்பசுவாமி திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஸ்ரீஇரட்டை பிள்ளையார், ஸ்ரீ சபரி தர்ம சாஸ்தா சேவா அறக்கட்டளை மற்றும் ஐய்யப்பன் பக்தர்கள் சார்பாக 3-ம் ஆண்டாக அய்யப்பா சுவாமி திருவீதி உலாநடைபெற்றது.
அப்போது காவிரியாற்றின் கரையில்ஐயப்ப சுவாமிக்கு இன்று ஆராட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர், முருகப்பெருமான் , ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐய்யப்பன் மின் அலங்காரத்தில் வாசனத்தில் காட்சி தர மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான ஐய்யப்பா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.