நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்தி கடன்
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் ஆலய மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று 2-ம் நாள் நிகழ்வாக காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி கரகம், வேல் அருவால் பூசாரியுடன் பல்வேறு வீதிகள் வழியாக எடுத்து வந்து திருக்கோயில் வந்து அடைந்தனர்.
கோவில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் கோயில் பூசாரி முதலில் இறங்க பின் வேல் பூசாரி, அருவாள் பூசாரி கரகத்துடன் பூசாரிகள் இறங்கியபின் ஏராளாமான பக்தகள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்திகடன் செய்தனர்.
பின்னர்இரவு உற்சவ பகவதியம்மன் அலங்கரிக்கப்ட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்