நாமக்கல் மோகனூர் மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா
நாமக்கல் மோகனூர் மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா – 15-ம் நாள் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 7-4-2025 அன்று இரவு காப்பு கட்டி கம்பம் நட்டு துவங்கியது பின் தினமும் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் 15ம் நாள் நேற்று திங்கள்கிழமை மாலை . மோகனூர் காவிரியிலிருந்து பக்தர்கள் புனித நீராடி திருக்கோவிலை வந்தடைந்தது அப்போது கோவில் மூலவர் மாரியம்மன்க்கு பலவிதமான வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் பின் மகா தீபாரதனை காண்பித்த பின் மூலவர் மாரியம்மனுக்கு வெள்ளி கவச சிறப்பு அலங்காரம்மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் முதலில் கோவில் பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி பூவாரி மூலவர் மாரியம்மனுக்கு சமர்பணம் செய்த பின் வரிசையாக ஆயிரக்கணக்காண பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்ந்தி கடன் செய்தனர்.
22-4-2025 செவ்வாய்கிழமை அன்று கிடா வெட்டு, மாவிளக்கு 23-4-2025 புதன்கிழமை அன்று மஞ்சள் நீராட்டடுட்டுடன் விழா நிறை பெறுகிறது. விழாவிற்கானஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகிறது.