in

நாமக்கல் பரமத்தி வேலூர் பகவதி அம்மன் ஆலயத்தில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமக்கல் பரமத்தி வேலூர் பகவதி அம்மன் ஆலயத்தில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேல தெருவில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத உற்சவத்தினை முன்னிட்டு பகவதி அம்மன் ஆலய பூ மிதி திருவிழா 25.12.24 புதன் கிழமை அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் நிகழ்வாக காலையில் ஆலயம் முழுவதும் வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்பு மூலவர் பகவதி ணஅம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவிரி தீர்த்தம் அபிஷேகம் ஊர் மக்கள் அனைவரும் காலை முதல் மாலை வரை செய்து வந்தனர்.

மாலையில் ஆலயத்தில் உடுக்கை முழங்க சாமி அழைக்கப்பட்டு வேல் மற்றும் மூலவர் அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து உற்சவர் பகவதி அம்மன் கரகம் மற்றும் வேல் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது.

இதில் முதலில் உற்சவர் பகவதி அம்மனை பூக்குழி முன்பு கொண்டு வந்து சேர்ந்தனர் பின்பு முதலில் கரகம் மற்றும் வேலினை காப்பு கட்டி மற்றும் வேல் பூசாரி சுமந்து கொண்டு பூக்குளியல் இறங்கி வந்தனர்.

பிறகு 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பூக்குழி இறங்கினார்கள். பின்பு மூலவர் பகவதி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்ப்பாட்டினை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மௌன அஞ்சலி