in

நாமக்கல் பரமத்தி வேலூர் பகவதி அம்மன் ஆலய மார்கழி திருவிழா துவக்கம்

நாமக்கல் பரமத்தி வேலூர் பகவதி அம்மன் ஆலய மார்கழி திருவிழா துவக்கம்

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மேல தெருவில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத உற்சவ திருவிழாவினை முன்னிட்டு 20.12.24 வெள்ளிக்கிழமை அன்று இரவு பகவதி அம்மனுக்கு காவேரியில் இருந்து கரகம் பாலித்து சாமி அழைத்து வந்து காப்பு கட்டுதல் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 21.12.24 அன்று காலை கோவில் காப்பு கட்டி காவிரி ஆற்றில் இருந்து கலச தீர்த்தம் எடுத்து ஆலயத்தை சுற்றி வந்து வேல் மற்றும் மூலவர் அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள சுவாமி வேல்களுக்கு ஊர் மக்கள் தீர்த்த குடம் மற்றும் பால் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து மூலவர் பகவதி அம்மனுக்கு பால் அபிஷேகம், கலச அபிஷேகம் உடன் தீர்த்த குடம் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூலவர் பகவதி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

16-ம் ஆண்டு கருட பஞ்சமி விழா 10108 மகா சகஸ்ர தீப வழிபாடு கருட சேவை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இடைத்தரர்கள் ஆதிக்கம்…