நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு மிளகாய் யாகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள பெத்தாண்டவர் சுவாமி ஆலயத்தில் உள்ள பிரித்தியங்கிரா தேவி அம்மனுக்கு ஆவணி மாத பௌர்ணமியினை முன்னிட்டு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்ளிகளுடன் வர மிளகாய் யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரித்திங்கிரா தேவி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கலச அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது..
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.