நாமக்கல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் காசி விஸ்வநாதர் கோவில் சார்பாக ஆடி பெருக்கை முன்னிட்டு மோட்ச தீபம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சார்பாக காவேரி ஆற்றில் ஆடிப்பெருக்கு ஆடி 18 முன்னிட்டு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது
முன்னதாக மோட்ச தீபத்திற்கு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவாச்சாரர்கள் வேத மந்திரம் முழங்க அடுக்குதீபம் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் நிர்வாகிகள் மட்டும் காவிரி ஆற்றுக்கு மோட்ச தீபம் எடுத்து வரப்பட்டு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் அலுவலர்களின் துணையோடு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது.
பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுத்த நிலையில் காவிரி ஆற்று மேம்பாலத்தில் இருந்து சிவாய நமக என்ற கோஷம் முழுங்க பக்தர்கள் மோட்ச தீபத்தை வழிபட்டனர்.
காவிரி ஆற்று மேம்பாலத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
ஐந்து கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பிறகு பரமத்தி வேலூர் போக்குவரத்து காவல்துறையினர் வந்து போக்குவரத்தை சரி செய்து அனுப்பினார்.