நாமக்கல் பரமத்திவேலூர் எல்லையம்மன் ஆலய லட்சார்சனை பெருவிழா
நாமக்கல் மாவட்டம் – பரமத்திவேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மனுக்கு மாசி மாத உற்சவத்தினை முன்னிட்டு மஞ்சள், குங்குமம், பூக்கள் கொண்டு ஒரு லட்சத்து எட்டு லட்ச அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக காலை 6 மணி முதல் கணபதி வழிபாட்டுடன் யாக வேள்விகள் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை மஞ்சள், குங்குமம், பூக்கள் கொண்டு ஒரு லட்சத்து எட்டு அம்மன் திரு பெயர்களை கூறி லட்ச அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக மாலை எல்லையம்மனுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கனி வர்க்கங்கள், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, சொர்ண அபிஷேகம், சந்தனம், பன்னீர் போன்ற பல வாசனை திரவியங்கள் ஆன 21 திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து விசிறி, சாமரம், வேல், கண்ணாடி போன்ற சோடஷ உபசாரத்துடன் அடுகாரத்தி, பஞ்சாரத்தி, ஏகாரத்தி, கும்பாரத்தி, கலச ஆரத்தி உடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.