நாமக்கல் ராசிபாளையம் ஸ்ரீ சக்தி அம்மன் ஆலய மார்கழி திருவிழா
நாமக்கல் ராசிபாளையம் ஸ்ரீ சக்தி அம்மன் ஆலய மார்கழி திருவிழா – 2-ம் நாள் – மாவிளக்கு பூஜை சந்தனகாப்பு அலங்காரத்தில் சக்தி அம்மன்
நாமக்கல் மாவட்டம் இராசிபாளையம் இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி அம்மன் ஆலய மார்கழி மாத திருவிழா மிக விமர்சையாக துவங்கியது, நடைபெற்று வருகின்றன.
முதல்நாள் நிகழ்வாக, பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்வும் இரண்டாம் நாள் பக்தர்கள் மாவிளக்கு வைத்து படைக்கும் நிகழ்வும் நடைபெற்றன அப்போது மூலவர் சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பின்னர் அலங்காரமாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.
நிறைவாக மூலவர் சக்தி அம்மன், சக்தி விநாயகர், சமயபுரத்து மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டு இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்வு நடைபெற்றது.