in

திருக்குறுங்குடி ஸ்ரீசுவாமி அழகிய நம்பிராயர் திருக்கோவிலின் உள் அமைந்திருக்கும் ஸ்ரீ காலபைரவா் மூா்த்திக்கு வா்ணகலாபம் சாற்றி மகா கும்பாபிஷேகம்

திருக்குறுங்குடி ஸ்ரீசுவாமி அழகிய நம்பிராயர் திருக்கோவிலின் உள் அமைந்திருக்கும் ஸ்ரீ காலபைரவா் மூா்த்திக்கு வா்ணகலாபம் சாற்றி மகா கும்பாபிஷேகம் திருக்குறுங்குடி ஸ்ரீ பேரருளாளர் ராமானுஜர் சுவாமிகள் ஆசியுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பைரவா் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்

108 வைணவ திருத்தலங்களில் பாண்டிய நாட்டு திருப்பதிகளில் சிறப்புபெற்ற திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் உள்ளே அமைந்துள்ள பக்கம் நின்ற பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மகேந்திர கிரிநாதர் திருக்கோவில் அருகே அமைந்துள்ளது. ஸ்ரீகாலவைரவா் சன்னதி. இந்த சன்னதியின் சிறப்பு காலவைரவா் வாண்கலாபமாக அருள்பாலிக்கின்றாா். மேலும் அவா் முகத்தின் அருகே உள்ள விளக்கின் ஒளி ஆடும். பிற விளக்குகளின் ஒளி ஆடாது. அதை நாம் இன்றும் கண்கூடாக காணலாம்.

ஸ்ரீ காலவைரவா் அங்கிருப்பதாக ஐதீகம். சிறப்பு வாய்ந்த இந்த காலவைரவா் மூா்த்திக்கு வா்ணகலாபம் சாற்றி மகா கும்பாபிஷேக விழா இன்றைய தினம் வெகு விமர்சையாக. நடைபெற்றது இதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்றுகாலை திருக்குறுங்குடி சுவாமி அழகிய நம்பிராயர் சன்னதியில் தேங்காய் சமா்பித்து பகவத் பிரார்த்தனை நடைபெற்று ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாலையில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம் நடைபெற்று யாகசாலையில் கடம் பிரவேசம் செய்யப்பட்டது. தொடா்ந்து முதற்காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை கஜபூஜை கோபூஜை மூர்த்தி ரக்ஷாபந்தனம் நாடி சந்தானம் ஸ்பரிசாகுதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து திருக்குறுங்குடி ஸ்ரீ பேரருளாளர் ராமானுஜர் சுவாமிகள் ஏழுந்தருள மகா பூர்ணாகுதியும் தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை ஜீயா் சுவாமிகள் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக மேளதாளங்களுடன் எடுத்துவர ஸ்ரீ காலபைரவா் விமான கோபுரம் மற்றும் மூலமூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பு இணை ஆணையா் அன்புமணி கலந்துகொண்டாா். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை திருக்குறுங்குடி திருஜீயர் மடம் செய்திருந்தனர்.

What do you think?

நெல்லை சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த வங்கி ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது

வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்