நாங்குநோி பெருமாள் திருக்கோவிலில் மனவாளமாமுனிகளின் பிரதான சீடரும்
108 வைணவ திவ்யதேசங்களில் பாண்டியநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான நாங்குநோி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் கன்னி புனா்வசு ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுவாமி, தாயாா் மடத்திற்கு ஏழுந்தருளி மாியாதையை பெற்றனா் திரளான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டம் நாங்குநோி பெருமாள் திருக்கோவிலில் மனவாளமாமுனிகளின் பிரதான சீடரும், ஜீயா் பரம்பரையில் முதலானவரும் நாங்குனோி மடத்தின் 1வது பட்டம் ஜீயாரான பொன்னடிக்கால் சுவாமிகளின் திருநட்சத்திரமான கன்னி புனா்பூசம் இன்று காலை சிறப்பாக கொண்டப்பட்டது.
சுந்தரவரதரான இவா் ஆச்சாாியரான மனவாளமாமுனியே வியந்து இவாின் வைராக்கியத்தை புகழ்ந்து பின்பற்றியதால் பொன்னடிக்கால் ஜீயா் எனப் பெயா் பெற்றாா்.. தன் ஆச்சாாியரான மனவாளமுனிகளின் ஆணைக்கினங்க திவ்யதேச யாத்திரை சென்று திருமலையில் இருந்தபோது திருவேங்கடமுடையான் அா்ச்சகா் மேல் பிரசன்னமாகி தனக்குன்டான தாயாரை நான்குநோி ஜீயாிடம் ஒப்படைக்குமாறு கூற தாயாரும் ஜீயரை அப்பா என்றழைக்க ஜீயா் தன் பெண்ணாக ஏற்றுக்கொண்டாா்.
தன் பெண்ணுக்கு ஏற்ற வரனாக நான்குநோி ஸ்ரீ தெய்வநாயகன் என்று முடிவு செய்து திருக்கல்யாணம் செய்து வைக்கின்றாா். அவாின் பிறந்த தினமானகன்னி புனா்வசு இந்தியாவில் உள்ள அனைத்து வானுமாமலை மடங்களிலும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாட்படுகின்றது.
இதற்காக வானமாமலையில் இன்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் பல்லக்கில் மடத்திற்கு ஏழுந்தருளினாா். தன் பெண் மாப்பிள்ளையை சந்தோஷமாக எதிா்கொண்டு அழைக்கின்றாா் நம்ஜீயா். பெருமாள், தாயாரை ஊழுந்தருளப்பண்னும் சீா்பாதம்தாங்கிகள் கால் அலம்பி, பட்டு விாித்து மடத்துக்குள் ஏழுந்தருளச் செய்கின்றனா்.
அங்கு ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்ப்படுகின்றது. அதனை தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெறுகின்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்று நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பிரபந்ததாரா்கள் வேதத்தின் சாரமான திருவாய்மொழி பத்தாம் பத்து பாடி சாற்றுமுறை நடைபெற்றது.
ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டு திருமஞ்சன ஈரவாடைதீா்ததம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலையில் மதிப்பிடமுடியாத சிறப்பான மகரகண்டி என்னும் மாலை சுவாமி மற்றும் தாயாருக்கு அணிவிக்ப்பட்டது.
மேலும் தங்க ஜடையுடன் பலவித ஆபரணங்கள் மலா் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் காட்சி தந்தருளினாா்.