in ,

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஐப்பசி கோலாட்ட விழா

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஐப்பசி கோலாட்ட விழா

 

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஐப்பசி கோலாட்ட விழா முன்னிட்டு தைலக்காப்பு வைபவம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத கோலாட்ட திருவிழா முன்னிட்டு கைல காப்பு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக உற்சவர் கண்ணுடைய நாயகி அம்மனை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து அம்மனுக்கு 16 வகையான சேவைகளும் நறுமண தைலத்தை கொண்டு அம்மனுக்கு சாற்றி சிக்கு எடுத்து தலைவாறினர் பின்னர் அம்மனை கண்ணாடியில் காட்டி தலை முடிக்கு பூ வைத்து அலங்கரித்தனர் இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று  ஏக முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் அம்மனை பல்லக்கில் எழுந்துள்ள செய்து கோவில் உள்பிரகாரம் வலம் வர செய்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை