in

வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள்


Watch – YouTube Click

வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள்

கோவிந்தா கோஷங்கள் முழங்கு வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் ஏராளமான பக்தர்கள் சக்கரைதீபம் காட்டி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு பெருமாள் பூபாளம் ஆற்றில் வெண்பட்டு உடுத்தி இறங்கினாா்.

நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவ விழா திங்கள்கிழமை (ஏப்.15 ) அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் முகூர்த்தக்கால் ஊன்றியதுடன் தொடங்கியது.

இதையடுத்து, திருமஞ்சன வைபவம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் பூபாளம் ஆற்றில் இறங்கும் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் பெருமாள் வெண்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரை வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டாா். அதனைத் தொடா்ந்து பக்தா்களின் கோவிந்தா முழக்கத்துடன் பூபாளம் ஆற்றில் பெருமாள் இறங்கினாா்.
விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூா், கொல்லங்குடி, காளையாா்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.


Watch – YouTube Click

What do you think?

சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது மோடி