நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா
நத்தம் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா, கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மயில் சிம்மம் அன்ன வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் நகர்வலம் வந்து பத்திரங்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏற்றம், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். விழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சனம், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில், பொங்கல் வைத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இந்தநிலையில் நேற்று (புதன்கிழமை) காலை அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்றிரவு அம்மன் குளத்தில் இருந்துஎழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, ஆங்காங்கே வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான
பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் கோவிலை அம்மன் சென்றடைந்தவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.