பிரச்சார வேனில் தூங்கி விழுந்த நத்தம் விஸ்வநாதன்
பழனியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பழனி மலை அடிவாரம், சன்னதி வீதி, பேருந்து நிலையம் , காந்தி மார்க்கெட் , தேரடி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் வானில் சென்றபடி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அடிவாரம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேர்தலில் வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேரடியில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் முகமது முபாரக் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அடிவாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது நகரமன்ற உறுப்பினர்கள் பெயரை கூறிய போது கட்சி நிர்வாகிகள் பெயரை மட்டும் தெரிவித்தால் போதும் எனகூறினார் .
இதனால் அதிமுக நிர்வாகிகளுக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காந்தி மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் முகமது முபாரக், மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகர் இருவரும தலைக்கவசம் அணியாமல் சென்று பிரச்சாரம் செய்தனர்.
மேலும் பிரச்சாரம் வேனில் அமர்ந்திருந்த நத்தம் விசுவநாதன் தூங்கிய படியே சென்றது வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது.