தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விருதுநகரில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் தொழுநோய் ஒழிப்பு தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது இதில் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
முன்னதாக காந்திஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவருள் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செய்தார்.