தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைப்பெற்றது.
தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.
நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி மாவட்ட அருங்காட்சியகத்தில் நிறைவடைந்தது.