in

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி


Watch – YouTube Click

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி

 

சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டிய அஞ்சலி மேடையை ஆக்கிரமித்த சிறுமிகள்.. சிறப்பான பரதத் திறமையை வெளிப்படுத்தி அசத்தல்…

சிவராத்திரியை முன்னிட்டு வருடம் தோறும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 08.03.2024 அன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ஆட்டத்து 27 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வு முதல் நாள் நிகழ்வாக இரவு 7 மணிக்கு தொடங்கி விடியற்காலை 3 மணி வரை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக 9, 10 ஆகிய தினங்களில் நடந்த நாட்டியாஞ்சலி அஞ்சலியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இன்று சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, நியூ டெல்லி, தஞ்சாவூர்,  திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாட்டிய பள்ளிகளச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது பரதத் திறமையை வெளிப்படுத்தினர். குழுவாகவும் தனியாகவும் இவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக இன்று நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆரூர் தில்லை நாட்டியாலயா குழுவின் சார்பில் நாட்டியாஞ்சலியில் பங்கு பெற்றவர்களில் அதிகளவு சிறுமிகள் இடம் பெற்று மேடையை அழகுற ஆக்கிரமித்தனர்.

குறிப்பாக யுகேஜி படிக்கும் மாணவி முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வரை அந்த குழுவில் இடம் பெற்று தங்களது பரதத் திறமையை வெளிப்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் இறுதியில் நடனத் திறமையை வெளிப்படுத்திய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

வீலிங் செய்து ரீல்ஸ் போடும் இளைஞர் மீது வழக்கு

மக்கர் பண்ணும் டைரக்டர் சங்கர்… இந்தியன்2 படம் ரிலீஸ்சுக்கு தடா…. கடுப்பில் நாயகன்