செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழா
செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழாவில்…துர்க்கை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் 32 ஆம் ஆண்டு நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 17 அக். 03 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொடங்கி 10 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்று வந்தது.
இதில் விநாயகர், அம்மன், கோமாதா, விவசாயி, அனைத்து வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினுள் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து ஆராதனையும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
விழாவில் ஒன்பதாம் நாள் திருவிழாவில் ஆலயத்தில் உள்ள,சுந்தர விநாயகருக்கும் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது பின்னர் திருக்கோவில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு சரஸ்வதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று துர்க்கை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நவராத்திரி விழாவில் செஞ்சி, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் குலதெய்வங்களை வணங்கும் விதமாக திருவிளக்கு பூஜையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.