in

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணியின் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணியின் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சீகெம் விளையாட்டு மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிர்வாகிகள்,

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகளிலும் ஆடுகின்றது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சீகெம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும்,

இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும் புதுச்சேரியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் மகன் சமித் திராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஆடும் அறிமுகப் போட்டியே புதுச்சேரியில் நடைபெறும் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸ்திரேலியா அண்டர் 19 போட்டிகள் அட்டவணை :

21 செப்டம்பர்: 1வது ஒரு நாள் புதுச்சேரி, காலை 9:30
23 செப்டம்பர்: 2வது ஒரு நாள், புதுச்சேரி, காலை 9:30
செப்டம்பர் 26: 3வது ஒரு நாள், புதுச்சேரி, காலை 9:30

What do you think?

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் மலட்டாற்றின் குறுக்கே புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி…கோர்க்காடு ஏரியை துணைநிலை ஆளுநர் ஆய்வு