in

திண்டுக்கல் அருகே ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்

திண்டுக்கல் அருகே ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்

 

திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் பகுதியில் ஐயப்பன் பக்தர்கள் குழு சார்பில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் பக்தர்கள் குழு சார்பில் கடந்த 18 வருடங்களாக அன்னதான நிகழ்ச்சியானது வெகு விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் முதல் முறையாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது. இதில் மாலை அணிந்து விரதம் இருந்த ஏராளமான ஐயப்ப பக்த்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

மேலும் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பூக்குழி இறங்கும்போது அசம்பாவிதம் ஏற்படா வர்ணம் இருக்க தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக கருப்பசாமி வேடம் அணிந்த நபர் கருப்பசாமி பாடலுக்கு ஆட்டம் ஆடியவாறு பூக்குழி இறங்கினார்.

What do you think?

மதுரை டூ மலேசியா சென்னை வழியாக விமான சேவை நாளை முதல் தொடக்கம்

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை நகைகளை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு