மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த நீ தானே எந்தன் பொன்வசந்தம் தர்ஷனா
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன்.
அதன்பிறகு ஜீ தமிழில் கனா என்ற தொடரில் நடித்தவர் திருமணத்தின் காரணமாக அந்த தொடரை விட்டு விலகினார். இவர் கடந்த ஆண்டு அபிஷேக் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்தார்.
தர்ஷனாவும் அதே துறையை சார்ந்தவர், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தற்பொழுது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கின்றனர்.
அதில் எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் எங்களுடைய குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் எங்கள் சிறிய Munch…சினை விரைவில் சந்திப்பதில் நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் போது உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் எங்களைத் தேர்ந்தெடுங்கள் என்று தான் Conceive…ஆகி இருப்பதாக இன்ஸ்டா..வில் பதிவிட்டுள்ளார்.