நீத்து சந்திரா பிரபல பாடகர் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல்
தமிழில்… யுத்தம் செய், ஆதி பகவன் ,சிங்கம் 3, சேட்டை, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நீத்து சந்திரா பிரபல பாடகர் ஹனி சிங் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நடிகை நீது சந்திரா, ராப் பாடகரான யோ யோ ஹனி சிங்கின் புதிய பாடலான மேனியாக் பெண்களை பாலியல் பொருட்களாகக் காட்டுவதாகக் குற்றம் சாட்டி, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (பிஐஎல்) தாக்கல் செய்துள்ளார். “இதுபோன்ற மோசமான பாடல்களை” தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
ராப் பாடகர் ஹனி சிங்கின் புதிய பாடலான மக்னாவில் மோசமான வரிகள் காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளார்.
பெண்களை தவறாக சித்தரித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள், பெண்ணின் முன்னேற்றத்தை பின்னுக்கு தள்ளும் படி இந்த பாடல்கள் அமைந்துள்ளது.
ஹனி சிங்குடன், பாடலாசிரியர் லியோ கிரேவால் மற்றும் போஜ்புரி பாடகர்கள் ராகினி விஸ்வகர்மா மற்றும் அர்ஜுன் அஜனாபி உள்ளிட்டோர் அவருடன் இணைந்து பணியாற்றிய தால் அவர்களின் பெயரையும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.