பெரும்பான்மை சமூகத்தினரை திமுகவிலிருந்து அப்புறப்படுத்திய நேரு
திருச்சியில் செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் பேசியபோது
பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் நேரு மகன் அருண் போட்டியிடுகிறார். கடந்த 1989 ல் அமைச்சராக இருந்த செல்வராஜுவால், ஒன்றிய செயலாளர் ஆக்கப்பட்டவர் நேரு. அதன் பின் சேர்மன் ஆகி அடையாளம் காட்டப்பட்ட நேரு, செல்வராஜ்க்கே சீட்டு கிடைக்க விடாமல் செய்தவர். அவர் மகனால் அரசியல் பதவிகளுக்கு வர முடியவில்லை.
ஆனால் நேரு மகனை எம்பியாக்க முயற்சி செய்கிறார். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வடிவவேல், ரத்தினம், ஒன்றிய சேர்மன் செல்லாண்டி, அவைத் தலைவராக இருக்கும் பேரூர் தர்மலிங்கம், முசிறி பகுதியில் சேர்மேனாக இருந்த தங்கராசு, ஒன்றிய செயலாளராக இருந்த டோல்கேட் சின்னச்சாமி போன்ற பதினைந்து முத்தரையர் சமூகம் சார்ந்த திமுகவினர் குடும்பம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அவர்கள் ஒதுக்கப்பட்டு அடியோடு நசுக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இரண்டு சதவீதம் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நேருவை, கடந்த 30 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ளார். கள்ளர் சமூகத்தை சேர்ந்த சேகரன் ஒரு முறை தான் எம்எல்ஏவாக இருந்தார்.
அதன் பின் அவர் தலை தூக்கவே முடியவில்லை, அன்பில் பெரியசாமி அவரையும் வளர விடவில்லை.திருவெறும்பூரில் ஒரு எம்எல்ஏ துரை இருந்தார் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
நாகவேணி வேலு என்பவரும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நகரச் செயலாளராக இருந்த தங்கராசு குடும்பமும் அகற்றப்பட்டது. சாத்தனூர் சாமி அய்யா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.செங்குறிச்சி கருப்பையா என முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த குடமுருட்டி சேகர் என்பவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். லால்குடி சேர்மன் ஆக இருந்த பிச்சை போன்றவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட அரசியலுக்கு வர முடியவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் திமுகவில் உள்ள முத்தரையர், கள்ளர், தேவேந்தி குல வேளாளர் சமூகத்தினரை அழித்தவர் நேரு. பெரும்பான்மை சமூகத்தினரை படிப்படியாக அழித்து அதன் மீது ஏறி நிற்பவர் தான் நேரு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மூன்று சமூகத்தை சேர்ந்த 25 குடும்பங்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்திய நேரு அவரது மகனை எம்பி ஆக்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் அவரது வீட்டில் குடும்ப பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுகவில், கதிரவனை மண்ணச்சநல்லூர் பகுதியில் எம்எல்ஏ, ஆக்கியுள்ளார்.
மண்ணச்சநல்லூர், முசிறி சேர்மன், துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய பொறுப்பாள்களாவும், அறங்காவல் குழு பொறுப்பிலும் நியமித்து உள்ளார். தனிப்பட்ட சமூகத்தை வளர்த்துக் கொண்டிருப்பது ஜனநாயக அரசியலா?சர்வாதிகாரம் தான். அவரது அரசியல் காலம் முடிவு விரைவில் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.