in

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக அரசு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார்.

அணையில் இருந்து சுமார் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 02-10-24 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியான் கால்வாய் ஆகிய கால்வாய் பாசனம் மூலம் 18 ஆயிரத்து 90 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் . மேலும் அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய கிராமங்களும் பயன்பெறும். எதிர்வரும் காலங்களில் தண்ணீர் குறையும் நிலையில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

What do you think?

மறுபடியும் முதலில் இருந்தா…கிளைமாக்ஸ்…லையாவது மருமகள்களை ஜெயிக்க வைப்பிங்களா

நாகை மாவட்டத்தில் கோடை உழவு பணிகள் தீவிரம்