நெல்லை ஜெயக்குமார் வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது சிபிசிஐடி ஏடிஜிபி ஐஜி எஸ்பி ஆகியோர் முகாம்
நெல்லை ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது; சிபிசிஐடி ஏடிஜிபி ஐஜி எஸ்பி ஆகியோர் ஒரே நாளில் நெல்லையில் முகாமிடுவதால் பரபரப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமார் உடல் கைப்பற்றப்பட்ட கரைசுத்து புதூரில் நேரில் சென்று பல கட்ட ஆய்வுகளை நடத்தினர்.
மேலும் சிபிசிஐடி எஸ் பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் அதை தொடர்ந்து ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
மேலும் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் சென்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர. குறிப்பாக சம்பவம் நடந்த அன்று கரைசுத்துபுதூரில் குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக யார் யார் செல்போன் டவர் காட்டிய எண்களொ ஆய்வு செய்யும் தம் டவர் விசாரணை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் சிபிசிஐடி முத்தரசி இன்று நெல்லைக்கு வந்தார் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியான ஆய்வாளர் உலக ராணி உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் சிபிசிஐடி ஏ டி ஜி பி வெங்கட்ராமன் மற்றும் ஐஜி அன்பு ஆகியோரும் இன்று ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரிக்க நெல்லை வர உள்ளனர் ஏடிஜிபி ஐஜி எஸ்பி என மூன்று பேரும் ஒரே நாளில் நெல்லையில் முகாமிடுகின்றனர்.
மேலும் ஜெயக்குமார் உடல் எடுக்கப்பட்ட கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஏடிஜிபி உட்பட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் 10 தனி படைகள் அமைத்து விசாரித்தும் துப்பு துலடங்காத நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் ஒரே நாளில் முகாமிட்டு இருப்பதால் ஜெயக்குமார் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.