in

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டி சிறப்பு வழிபாடு

ஆடி பதினெட்டாம் பெருக்கினை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். 18 வகையான பலகாரங்கள் தாமிரபரணி நதிக்கு படைத்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் அதேபோல ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று காவேரி தாமிரபரணி வைகை உள்ளிட்ட நதிகளையும் தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் தாமிரபரணி நதிக்கரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று 18 வகையான நெய்வேத்தியங்கள் படைத்து புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

அதனை தொடா்ந்து தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி ஆடிப்பெருக்கு இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில் நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் படித்துறையில் திரளான பெண்கள் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர் அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்

What do you think?

கேரளா வயநாட்டிற்கு பல நடிகர் நடிகைகள் நிதியுதவி

பெருங்குளம் அருள்மிகு மாயக் கூத்தர் திருக்கோயிலில் மஹாநிவேதநம் (அன்னக்கூட உற்சவம்)