நெல்லை – திருவழுதீஸ்வரர் திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
அருள்தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திரளான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் ஏர்வாடி அருள்தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட வரகுண பாண்டிய மன்னன் மதுரையில் அருள்பாலிக்கும் சோம சுந்தராிடம் வேண்ட அவாின் ஆணைப்படி ஏர்வாடிக்கு வந்து இங்குள்ள வாடா தீர்த்தத்தில் குளித்து ஈஸ்வரனை வணங்கியதால் வரகுண பாண்டியனின் பழியாகிய வழுவை நீக்கியதால் இத் தலத்து மூர்த்திக்கு திருவழுதீஸ்வரர் என்ற பெயா் உண்டாயிற்று.
சிறப்பு வாய்ந்த இத் திருத்தலத்தில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கும் கொடிப்பட்டத்திற்கும் பூஜைகள் செய்தனா்.
கொடிமரதம் எதிரே பசு மாட்டிற்கு அலங்காரம் செய்து கோ பூஜை வழிபாடு நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடத்தப்பட்டது. தொடா்ந்து கொடி மரத்திற்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டு புது வஸ்திரங்கள் அணிவத்து மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் மே.22ம் தேதி தேரோட்டம் நடைபெறுகின்றது.